10/30/2005


லமடங்கிய வெளிகளில்
உச்சஸ்தாயியில்
அலறுகின்றன பறவைகள்

குளிர் இரவுகளில்
மெல்லிய கம்பளிப் போர்வையைப் போன்ற
மிருதுவான உன் உடலை,
என்னைப் போர்த்தும் விரல்களை
கதகதப்பான வார்த்தைகளை
தேடித் தேடி
சலிப்புறுகிறது மனசு

எங்கு போயினும்
எல்லா வீடுகளிலும்
எல்லா இருக்கைகளிலும்
பெருக்கெடுத்து உடைகிறது
உன் நினைவு

இருட்டு வெளிகளில்
தனிமையின் தவிப்பை
இருளின் பயத்தை
விரட்ட விரும்பி
உரத்துச் சொல்கிறேன்
உனது பெயரை

நீ வேண்டும்
என் எல்லாத் தோல்விகளிலும்
எல்லாத் துன்பத்திலும்
என்னை திட்டித் தீர்க்க எனினும்
நீ என்னுடன் இருக்க வேண்டும்
~

sketch from