11/23/2004

அறிமுகம்

எனக்குப் பிடித்தமான இந்தக் கவதையோடு, இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கிறேன்.சிலுவை

இருளால் மூடுண்டது என் முகம்
வேண்டப்படாதது எனதாத்மா
நான் அதிகமாய் மிதிக்கும் உன் முன்றிலும்
சாளரத்தை மூடுகையில்
இரவுகளில் நித்திரையுமற்றுப் போகிறது
ஓயாது பெய்கிற மழையில்
என் துக்கமெனும் தீயோ மூண்டெரிகிறது
சொல்
ஊளையிடும் காற்று வெளியில்
நேசமான மெழுகுதிரிச் சுடரை
எவ்விதம் காப்பாற்றுவேன்

பா.அகிலன்

Comments on "அறிமுகம் "

 

Blogger Scoopy Dump said ... (2:45 p.m.) : 

வணக்கம்,
எதிர்காலத்தில் உங்களது தரமான ஆக்கங்களை எதிர்பார்த்து நிற்கிறோம்

விகடன்
www.vikadan.blogspot.com
www.vaNihamaadal.blogspot.com
www.sattheepan.blogspot.com

 

post a comment