செல்வி உருத்திராவின் மறுபெயர் சித்ரலேகா மெளனகுருவா?
| -தான்யா-
எதை எதை எழுதவேண்டும் எவற்றை பிரசுரிக்கவேண்டும் என்று ஒரு விமர்சகருக்கும் பத்திரிகைக்கும் சில நிபந்தனைகள் இட்டிருக்கிறார் செல்வி உருத்திரா அவர்கள். எனது வாசிப்பையோ எழுத்தாளர்கள் குறித்த எனது பிரம்மைகளையோ எனது விமர்சனத்தில் நான் எழுதவில்லை. செல்வி உருத்திரா அவர்களைப்போல் ஒருபட்சமாக சிந்திக்கவும் இல்லை. ராஜ்மார்த்தாண்டனையும் மாலதி மைத்ரேயியையும் ஒரே தளத்தில் வைத்து விமர்சிக்க முடியும். அவர்களது அஜாக்கிரதையை சுட்டிக்காட்ட முடியும். சித்ரலேகா மெளனகுரு ஒரு எழுத்தாளர் என்பதோ சமூகசேவகி என்பதோ கலாநிதி என்பதோ எனது விமர்சனத்துக்கு முக்கியமானதாக நினைக்கவில்லை. எனது விமர்சனத்தில் கூட சித்ரலேகா மெளனகுரு அவர்கள் என்றே குறிப்பிட்டிருந்தேன் ஆனால் செல்வி உருத்திரா அவர்கள் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு என்று எழுதியிருந்தார்கள் இதன் மூலம் அவர் எதை முக்கியப்படுத்துகிறார் முன்நிலைப்படுத்துகிறார் என்பது தெளிவாகவே புரிகிறது. நான் சித்ரலேகா அவர்கள் எழுதிய சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற குறிப்பை வாசிக்காமல் எழுதியதாய் எழுதி, கூடவே “பெண்” சஞ்சிகை அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்தால் வருவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இவற்றைச் சுட்டிக்காட்டிய உருத்திரா அவர்கள் கூடவே எந்த எந்த இதழ்களுக்கு சித்ரலேகா அவர்கள் தொகுப்பாசிரியராக இருந்தார் என்பதையும் எழுதியுள்ளார்கள். எழுதுவதில் முனைப்பாக இருந்த செல்வி உருத்திரா அவர்கள் பார்க்கத் தவறியது அவற்;றில்தான் சிவரமணியின் கண்டெடுக்கப்பட்ட கவிதைகள் பிரசுரிக்கப்பட்டிருப்பதை. நான் இந்த எதிர்வினையை எழுதும்போது கூட, ஏன் செல்வி உருத்திரா அவர்கள் எனது கேள்விக்கு பதில் அளித்துள்ளார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சித்ரலோகா மெளனகுரு அல்லது சன்மார்க்கா அவர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விக்கு எதற்காக நடுவில் ஒருவர் அதுவும் புரியவில்லை. ஏன் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு பேரசிரியர் அல்லாதவர்களுக்கு பதில் அளிக்க மாட்டார்களா? செல்வி உருத்திரா அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது இது தான்: சிவரமணியின் கவிதைகள் கண்டெடுக்கப்பட்டள்ளது என்று மொட்டையாக பிரசுரிப்பதில் உள்ள பிரச்சினைகளையே நான் எழுதியிருந்தேன். எனக்குத் தெரிந்து சிவரமணி கவிதைகள் அரசுடமையாக்கப்படவில்லை, யாரும் கண்டெடுத்துப் பிரசுரிக்கலாம் என்பதற்கு. குறிப்பிட்ட பெண் இதழின் கெளரவ மற்றும் ஆசி¡¢யராக உள்ளவரையே ‘கண்டெடுக்கப்பட்ட” கவிதைகளுக்கு பொறுப்பாக்க முடியும், அதனடியில் பெயர் போடாத பட்சத்தில். அதிலும் சிவரமணி ஈழ அரசியலிலும் சா¢ ஈழ இலக்கியத்திலும் சா¢ முக்கியமான பிம்பம். அவருடைய கவிதையை கண்டெடுத்தது என மொட்டையாக போடமுடியாது. அவா¢ன் கவிதைகளுக்கு யாரும் ஏகோபித்த உ¡¢மை கொண்டாட முடியாது, அது, “சிவரமணி – வாழ்வும் கவிதையும்” என குறிப்பு எழுதியவராய் இருந்தாற்கூட! சித்ரலேகா அவர்கள்; பொறுப்பான இடத்தில் இருப்பதால், கவிதைகள் யாரால் எப்படி எங்கு கண்டெடுக்கப்பட்டது என்பதைப் போட வேண்டும், அதுவே பதிப்பு அறம். அதை அவர் செய்திருக்கவில்லை. இதை விடுத்து சித்ரலேகா மெளனகுரு எதை செய்தார் எதை எதைத் தொகுத்தார் அல்லது என்ன செய்கிறார் என்பதை அட்டவணைப்படுத்தவேண்டிய தேவையேதும் எனக்கு இருக்கவில்லை அது செல்வி. உருத்திராவிற்கு நிறையவே இருப்பதாயப் படுகிறது. ஈழத்தின் மிகமுக்கியமான பெண் கவிஞையின் கவிதை பொறுப்பற்று பிரசுரிக்கப்பட்டள்ளது இது குறித்து மேன்மை தாங்கிய சித்ரலேகா மெளனகுரு அவர்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை ஆனால் அந்தப் பிழையை ஆழியாள் அவர்கள் காலச்சுவடு இதழில் எழுதிய போது அதன் தொகுப்பாசிரியர்களான மாலதிமைத்ரேயி, க்ருஸாங்கினி ஆகியோர் அது தங்களது அஜாக்கிரதை இல்லை அது 15 வருடமாக ஈழத்து படைப்பாளிகளின் அஜாக்கிரதை என்கிறார்கள். இவற்றுக்கும் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் பதில் தரவில்லை. இதற்கான பதிலை தாங்கள் தர முடியாது தெளிவு படுத்தவும் முடியாது, மாறாக, சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற கட்டுரையையும் அவரது கவிதைகளையும் அடிக்கடி கண்டெடுத்துப் பிரசுரம் செய்யும் பணியையே சிவரமணியையும் சிவரமணியின் கவிதைகளையும் நன்கு அறிந்த(!) சித்ரலேகா மெளனகுருவால் செய்ய முடியும். இது பற்றி எந்த அக்கறையும் இல்லாது இலக்கியம் வாசிப்பு என்று எந்த தீவிரமும் அற்று பெண்கள் வாழ்க்கைபற்றி அவர்கள் இன்னல்கள் பற்றியே அதிகமாக சிந்திக்கும் உருத்திரா அவர்கள் -மெனக்கெட்டு- எனக்கு எதிர் வினையாற்றியது மிகப்பெரிய விடயமே. ஆனால் சித்ரலேகாவின் உத்தியோக பி.ஏ யாக அவர் அல்லாதபட்சத்து அது அவசியமற்றது. அக்கறையீனங்களை பொருட்டாக கருதி கருத்துக்கள் தெரிவிக்க முடியாது பெண்களின் வாழ்க்கையைப் பற்றி அக்கறை காட்டும் செல்வி உருத்திரா எதன் அடிப்படையில் என் பொறுப்பற்றஇ அறிவற்ற விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றினார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு விமர்சனத்தை எழுதும்போது எங்கெல்லாம் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுகிறது எவ்வளவு விகிதத்தில் இடம் பெறுகிறது என்று புள்ளி விபரத்தை எழுத வேண்டும் என்று உருத்திரா அவர்கள் எதிர்பார்க்க இயலாது. அடக்குமுறைகள் ஏற்படுகிறது அதே போல் அதிலிருந்து பல படைப்பாளிகளும் உருவாகிறார்கள். அவர்களின் படைப்புக்கள் பலவிதமான வெளிப்பாடுகளையும் உருவாக்குகிறது. அதை விடுத்து இது எல்லாம் பெரிய விடயமா என்பது போன்று உருத்திரா அவர்கள் எழுதியுள்ளார்கள். இவர் எழுதியது போல் பார்த்தால் எந்த பெண்களும் எழுதக் கூடாது மற்றும் யுத்த காலத்தில் எதற்கு இலக்கியம் என்று போர்க்களத்தில் நிற்பவர்களிடம் கேட்பார்கள் போலும். கடைசியாக நான் எப்படி விமர்சனம் எழுதவேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். எனது விமர்சனம் முறிகிறதா அல்லது ஒரே சீரில் இருக்கிறதா என்பதையெல்லாம் நான்தான் தீர்மானிக்கவேண்டும். உங்களுக்கு இலகுவாக புரியும் விதமாக, சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. விமர்சனம் நீங்கள் எழுதுவது போன்றே இருக்க வேண்டும் என்றில்லை. நான் எழுதிய ஏனையவற்றை விடுத்து சித்ரலேகா மெளனகுருவை விமர்சித்ததையே முக்கியமாக எழுதியிருந்தீர்கள். எனது நோக்கம் அக்கறையீனங்களை சுட்டிக்காட்டுவதே அதை நான் செய்திருந்தேன். http://www.geotamil.com/pathivukal/tanyaonuruthira_oct2004.html |

Comments on "செல்வி உருத்திராவின் மறுபெயர் சித்ரலேகா மெளனகுருவா? "
post a comment