11/23/2004

அறிமுகம்

எனக்குப் பிடித்தமான இந்தக் கவதையோடு, இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கிறேன்.சிலுவை

இருளால் மூடுண்டது என் முகம்
வேண்டப்படாதது எனதாத்மா
நான் அதிகமாய் மிதிக்கும் உன் முன்றிலும்
சாளரத்தை மூடுகையில்
இரவுகளில் நித்திரையுமற்றுப் போகிறது
ஓயாது பெய்கிற மழையில்
என் துக்கமெனும் தீயோ மூண்டெரிகிறது
சொல்
ஊளையிடும் காற்று வெளியில்
நேசமான மெழுகுதிரிச் சுடரை
எவ்விதம் காப்பாற்றுவேன்

பா.அகிலன்

11/17/2004

செல்வி உருத்திராவின் மறுபெயர் சித்ரலேகா மெளனகுருவா?

-தான்யா-


எதை எதை எழுதவேண்டும் எவற்றை பிரசுரிக்கவேண்டும் என்று ஒரு விமர்சகருக்கும் பத்திரிகைக்கும் சில நிபந்தனைகள் இட்டிருக்கிறார் செல்வி உருத்திரா அவர்கள். எனது வாசிப்பையோ எழுத்தாளர்கள் குறித்த எனது பிரம்மைகளையோ எனது விமர்சனத்தில் நான் எழுதவில்லை. செல்வி உருத்திரா அவர்களைப்போல் ஒருபட்சமாக சிந்திக்கவும் இல்லை. ராஜ்மார்த்தாண்டனையும் மாலதி மைத்ரேயியையும் ஒரே தளத்தில் வைத்து விமர்சிக்க முடியும். அவர்களது அஜாக்கிரதையை சுட்டிக்காட்ட முடியும். சித்ரலேகா மெளனகுரு ஒரு எழுத்தாளர் என்பதோ சமூகசேவகி என்பதோ கலாநிதி என்பதோ எனது விமர்சனத்துக்கு முக்கியமானதாக நினைக்கவில்லை. எனது விமர்சனத்தில் கூட சித்ரலேகா மெளனகுரு அவர்கள் என்றே குறிப்பிட்டிருந்தேன் ஆனால் செல்வி உருத்திரா அவர்கள் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு என்று எழுதியிருந்தார்கள் இதன் மூலம் அவர் எதை முக்கியப்படுத்துகிறார் முன்நிலைப்படுத்துகிறார் என்பது தெளிவாகவே புரிகிறது. நான் சித்ரலேகா அவர்கள் எழுதிய சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற குறிப்பை வாசிக்காமல் எழுதியதாய் எழுதி, கூடவே “பெண்” சஞ்சிகை அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்தால் வருவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இவற்றைச் சுட்டிக்காட்டிய உருத்திரா அவர்கள் கூடவே எந்த எந்த இதழ்களுக்கு சித்ரலேகா அவர்கள் தொகுப்பாசிரியராக இருந்தார் என்பதையும் எழுதியுள்ளார்கள். எழுதுவதில் முனைப்பாக இருந்த செல்வி உருத்திரா அவர்கள் பார்க்கத் தவறியது அவற்;றில்தான் சிவரமணியின் கண்டெடுக்கப்பட்ட கவிதைகள் பிரசுரிக்கப்பட்டிருப்பதை. நான் இந்த எதிர்வினையை எழுதும்போது கூட, ஏன் செல்வி உருத்திரா அவர்கள் எனது கேள்விக்கு பதில் அளித்துள்ளார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சித்ரலோகா மெளனகுரு அல்லது சன்மார்க்கா அவர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விக்கு எதற்காக நடுவில் ஒருவர் அதுவும் புரியவில்லை. ஏன் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு பேரசிரியர் அல்லாதவர்களுக்கு பதில் அளிக்க மாட்டார்களா?

செல்வி உருத்திரா அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது இது தான்: சிவரமணியின் கவிதைகள் கண்டெடுக்கப்பட்டள்ளது என்று மொட்டையாக பிரசுரிப்பதில் உள்ள பிரச்சினைகளையே நான் எழுதியிருந்தேன். எனக்குத் தெரிந்து சிவரமணி கவிதைகள் அரசுடமையாக்கப்படவில்லை, யாரும் கண்டெடுத்துப் பிரசுரிக்கலாம் என்பதற்கு. குறிப்பிட்ட பெண் இதழின் கெளரவ மற்றும் ஆசி¡¢யராக உள்ளவரையே ‘கண்டெடுக்கப்பட்ட” கவிதைகளுக்கு பொறுப்பாக்க முடியும், அதனடியில் பெயர் போடாத பட்சத்தில். அதிலும் சிவரமணி ஈழ அரசியலிலும் சா¢ ஈழ இலக்கியத்திலும் சா¢ முக்கியமான பிம்பம். அவருடைய கவிதையை கண்டெடுத்தது என மொட்டையாக போடமுடியாது. அவா¢ன் கவிதைகளுக்கு யாரும் ஏகோபித்த உ¡¢மை கொண்டாட முடியாது, அது, “சிவரமணி – வாழ்வும் கவிதையும்” என குறிப்பு எழுதியவராய் இருந்தாற்கூட!

சித்ரலேகா அவர்கள்; பொறுப்பான இடத்தில் இருப்பதால், கவிதைகள் யாரால் எப்படி எங்கு கண்டெடுக்கப்பட்டது என்பதைப் போட வேண்டும், அதுவே பதிப்பு அறம். அதை அவர் செய்திருக்கவில்லை. இதை விடுத்து சித்ரலேகா மெளனகுரு எதை செய்தார் எதை எதைத் தொகுத்தார் அல்லது என்ன செய்கிறார் என்பதை அட்டவணைப்படுத்தவேண்டிய தேவையேதும் எனக்கு இருக்கவில்லை அது செல்வி. உருத்திராவிற்கு நிறையவே இருப்பதாயப் படுகிறது.

ஈழத்தின் மிகமுக்கியமான பெண் கவிஞையின் கவிதை பொறுப்பற்று பிரசுரிக்கப்பட்டள்ளது இது குறித்து மேன்மை தாங்கிய சித்ரலேகா மெளனகுரு அவர்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை ஆனால் அந்தப் பிழையை ஆழியாள் அவர்கள் காலச்சுவடு இதழில் எழுதிய போது அதன் தொகுப்பாசிரியர்களான மாலதிமைத்ரேயி, க்ருஸாங்கினி ஆகியோர் அது தங்களது அஜாக்கிரதை இல்லை அது 15 வருடமாக ஈழத்து படைப்பாளிகளின் அஜாக்கிரதை என்கிறார்கள். இவற்றுக்கும் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் பதில் தரவில்லை. இதற்கான பதிலை தாங்கள் தர முடியாது தெளிவு படுத்தவும் முடியாது, மாறாக, சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற கட்டுரையையும் அவரது கவிதைகளையும் அடிக்கடி கண்டெடுத்துப் பிரசுரம் செய்யும் பணியையே சிவரமணியையும் சிவரமணியின் கவிதைகளையும் நன்கு அறிந்த(!) சித்ரலேகா மெளனகுருவால் செய்ய முடியும். இது பற்றி எந்த அக்கறையும் இல்லாது இலக்கியம் வாசிப்பு என்று எந்த தீவிரமும் அற்று பெண்கள் வாழ்க்கைபற்றி அவர்கள் இன்னல்கள் பற்றியே அதிகமாக சிந்திக்கும் உருத்திரா அவர்கள் -மெனக்கெட்டு- எனக்கு எதிர் வினையாற்றியது மிகப்பெரிய விடயமே. ஆனால் சித்ரலேகாவின் உத்தியோக பி.ஏ யாக அவர் அல்லாதபட்சத்து அது அவசியமற்றது.

அக்கறையீனங்களை பொருட்டாக கருதி கருத்துக்கள் தெரிவிக்க முடியாது பெண்களின் வாழ்க்கையைப் பற்றி அக்கறை காட்டும் செல்வி உருத்திரா எதன் அடிப்படையில் என் பொறுப்பற்றஇ அறிவற்ற விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றினார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு விமர்சனத்தை எழுதும்போது எங்கெல்லாம் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுகிறது எவ்வளவு விகிதத்தில் இடம் பெறுகிறது என்று புள்ளி விபரத்தை எழுத வேண்டும் என்று உருத்திரா அவர்கள் எதிர்பார்க்க இயலாது. அடக்குமுறைகள் ஏற்படுகிறது அதே போல் அதிலிருந்து பல படைப்பாளிகளும் உருவாகிறார்கள். அவர்களின் படைப்புக்கள் பலவிதமான வெளிப்பாடுகளையும் உருவாக்குகிறது. அதை விடுத்து இது எல்லாம் பெரிய விடயமா என்பது போன்று உருத்திரா அவர்கள் எழுதியுள்ளார்கள். இவர் எழுதியது போல் பார்த்தால் எந்த பெண்களும் எழுதக் கூடாது மற்றும் யுத்த காலத்தில் எதற்கு இலக்கியம் என்று போர்க்களத்தில் நிற்பவர்களிடம் கேட்பார்கள் போலும்.

கடைசியாக நான் எப்படி விமர்சனம் எழுதவேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். எனது விமர்சனம் முறிகிறதா அல்லது ஒரே சீரில் இருக்கிறதா என்பதையெல்லாம் நான்தான் தீர்மானிக்கவேண்டும். உங்களுக்கு இலகுவாக புரியும் விதமாக, சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. விமர்சனம் நீங்கள் எழுதுவது போன்றே இருக்க வேண்டும் என்றில்லை. நான் எழுதிய ஏனையவற்றை விடுத்து சித்ரலேகா மெளனகுருவை விமர்சித்ததையே முக்கியமாக எழுதியிருந்தீர்கள். எனது நோக்கம் அக்கறையீனங்களை சுட்டிக்காட்டுவதே அதை நான் செய்திருந்தேன்.
http://www.geotamil.com/pathivukal/tanyaonuruthira_oct2004.html

தான்யாவின் கட்டுரை தொடர்பான சில கருத்துக்கள்!

செல்வி .வ. உருத்திரா
(மட்டக்களப்பு, இலங்கை)


தினக்குரல் ஜுன்13 |பனுவலில்| இரவில் சலனமற்றுக் கரையும் மனிதா;கள் எனும் நூலை முன்வைத்து தான்யா எழுதிய குறிப்பு தொடர்பாக சில முரணனான கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாகவும் தான்யா அவர்கள் சில விடயங்களை தெளிவாக்கிவிட்டு வெகுஜன ஊடகங்களுக்கு எழுதியனுப்பும் ஆக்கங்கள் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிக் இக்குறிப்பை வரைகின்றேன். தான்யாவின் முரண்பாடான பிழையான கருத்துக்களில் முதலாவதாக அமைவது |பெண்| சஞ்சிகை என்பது தனிப்பட்ட ஒரு நபரான சித்ரலேகா மெளனகுருவினது என்பது. அத்தகைய எடுகோளின் அடிப்படையில் தான் சில மேற்கோள் காட்டுதலுக்காக தான் |பெண்| போன்ற பதங்களை பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது தான்யாவின் குறிப்பு. இது தவறானது.

அரசுசார்பற்ற தொண்டு நிறுவனமான சூ¡¢யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் (இல.20 டயஸ் லேன் மட்டக்களப்பபு ) ஒரு வெளியீடாகவே |பெண்| சஞ்சிகை வெளிவருகின்றது. இதற்கு இந்நிறுவனத்தின் வெளியீட்டுப்பி¡¢வு இணைப்பாளர் சே.விஜயலட்சுமி பொறுப்பாக உள்ளார். இவருக்கு முன்னைய காலங்களில் இணைப்புக்குழு உறுப்பினர்களிலிருந்து ஒவ்வொருவராக தொகுத்தளிக்கும் பொறுப்பை ஏற்று |பெண்| வெளிக்கொணரப்பட்டது. இதனடிப்படையிலேயே பேராசி¡¢யர் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் |பெண்| சஞ்சிகையின் இதழ்களான 2.2 4.1 5.2 6.2 ஆகியவற்றுக்கு ஆசி¡¢யராக இருந்துள்ளார் அன்றி |பெண்| சஞ்சிகை என்பது பேராசி¡¢யர் சித்ரலேகா மெளனகுருவினது தனிப்பட்ட வெளியீடுகள் அல்ல. தான்யா இது பற்றி போதிய விளக்கமின்றியே அக்குறிப்பினை வரைந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

சித்ரலேகா அவர்கள் |சொல்|லாத சேதிகள்| |சிவரமணி கவிதைகள்| ஆகிய இரு நூல்களையும் பதிப்பித்துள்ளார் |சொல்லாத சேதிகள்| கவிதைகளில் சிவரமணியின் இரு கவிதைகள் உள்ளன. அவ்விரு கவிதைகளும் இந்நுரலிலேயே முதல் முதல் பிரசுரமாயுள்ளன. |வையகத்தை வெற்றி கொள்ள| என்ற கவிதையும் ஒன்று. அது சிவரமணியினுடையது. |பறத்தல் அதன் சுதந்திரத்தில்| சன்மார்க்காவின் பெயா¢ல் பிரசுரமாயுள்ளது. இத்தவறுக்கு |பறத்தல் அதன் சுதந்திரத்தின|; ஆசி¡¢யர்களே பொறுப்பு அன்றி சித்ரலேகா அல்ல. அவ்வப்போது போதிய தேடலின்றி அஜாக்கிரதையாக பதிப்பாளர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒருவரை பாத்திரமாக்குவது எந்த வகையிலும் தா;மமாகாது.

செல்வி சிவரமணி கவிதைகளில் (தாமைரைச் செல்வி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.) தான்யா குறிப்பிட்ட கவிதை பற்றிய போதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாமரைச்செல்வி பதிப்பகத்தின் வெளியீடு குறித்து தான்யா எழுதும் போது அதனைப் புரட்டிப் பார்த்தாவது எழுதியிருக்கலாம். இல்லையேல் சித்ரலேகா மெளனகுருவினால் |செல்வி சிவரமணி கவிதைகள்| தொகுப்பில் :;சிவரமணியின் வாழ்வும் கவிதையும|; பற்றிய ஓர் குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அதில் சிவரமணியினால் நேரடியாக தரப்பட்ட கவிதைகள் எவை? வேறு சஞ்சிகைகளில் பிரசுரமாகியவை எவை? என்பன போன்ற வி¡¢வான குறிப்புக்கள் காணப்படுகின்றன.

அவ்வாறு இருந்தும் பேராசி¡¢யர் சித்ரலேகா மெளனகுரு தெளிவு படுத்த வேண்டும் என தான்யா குறிப்பிட்டிருப்பது எதனை என்பது எமக்குத் தெளிவாகவில்லை. ஆது மட்டுமன்றி சித்ரலேகா மெளனகுரு பெண்கள் தொடர்பான செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு உடையவர். அவ்வாறு இருந்தும் இத்தகைய பெயர் மாறாட்டங்களில் அஜாக்கிரதை உடையவர் என தான்யா குறிப்பிடுவதன் அடிப்படை எது என்பதை தான்யாவே எமக்கு தெளிவு படுத்த வேண்டும்.

அது மட்டுமன்றி சிவரமணியின் கவிதைகளில் |பெண்| சஞ்சிகைகளில் வெளிவந்தது தொகுதி 2 இலக்கம் 2 இல்;உள்ள ஒரு கவிதையே. தான்யா குறிப்பிடும் அஜாக்கிரதையான அளவிற்கு |பெண்| சஞ்சிகையில் எத்தனை கவிதைகள் சிவரமணியினுடையது வெளிவந்தன என்பது தான்யாவுக்கே வெளிச்சம்.

ஆனால் சிவரமணியின் கவிதை வா¢களில் ஒன்றான |தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாயுள்ளளேன்| என்பதை மகுட வாசகமாக கொண்டே (முன்அட்டை) |பெண|; சஞ்சிகை வெளிவருகின்றது இதில் மறுப்பேதும் இல்லை. இதனையே தான்யா அவர்கள் |கண்டெடுத்தேன்|, |கண்டெடுத்தேன்| என சித்திரலேகா மெளனகுரு அவர்கள் குறிப்பிடுவதாக அர்த்தப்படுத்தி எழுதியிருக்கலாம். தான்யா அவர்கள் குறிப்பிடும் கண்டெடுத்துப் போடும்படியான சிவரமணியின் கவிதைகள் எத்தனை |பெண்| சஞசிகையில் வெளிவந்தது என்பது தான்யாதான் வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் எழுத்துலகில் பெண்கள் எழுதுதல்; என்பதே ஓர் குறிப்பிடத்தக்க விடயம். ஆண்கள் தங்கள் இலக்கிய இருப்புக்களை உறுதிப்படுத்த எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள் நேர ஒதுக்கீடு, வாசிப்பு (குடும்ப பொறுப்பு இல்லாது) .போன்ற முயற்சிகளின் காற்பங்கு கூட எழுதிய எழுதி வந்த எழுதப் பழகி விட்டுவிட்ட பெண் எழுத்தாளர்கள் குடும்பத்துள் நுழைந்ததும் முன்னெடுப்பதில்லை. முன்னெடுத்த ஓர் சிலர் தவிர மூத்த பெண் எழுத்தாளர்களில் (தற்போது எழுதுவதைக்;குறைத்துக் கொண்ட) அனேகா; குடும்பத்துள் வேறு வடிவங்களில் தாயாய், மனைவியாய், தொழில் நிலையத்து பணியாளராய் தங்களை பங்கிட்டுள்ளனர் .இத்தகைய தம் நிலைகளை முறியடித்து எழுத வந்துள்ள பின்னர் பெண்கள் எதி;ர்கொள்ளும் பிரச்சனைகள் பல...

தான்யா குறிப்பிட்டு குறை கூறும் பட்டியலிடல் அக்கறையீனம் என்பனவற்றை ஒரு பொருட்டாக நாம் கருதி கருத்துக்கள் எழுதும் காலம் அல்ல இது. பெண்களுக்கெதிரான வன்முறைகளும் அநீதிகளும் மிகுந்த பகுத்தறிவான அறிவியல் யுகத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொத்த இலக்கிய சூழலிலும் கூட குழுநிலை வாதம் இருக்கிறது. புதிதாய் ஓர் சிற்றிதழாவது வந்து விட்டால்- புதுக்கவிதை மாதி¡¢ பெயர்களையும் வா¢சைப்படுத்தியிருப்பார்கள.; எத்தனை சிற்றிதழ்கள் வெளிவருகின்றதோ அத்தனையிலும் அப்பட்டியிடல் இருக்கும்.

அவர்களின் கொள்கைகளையும் ஒருவர் மற்றொருவா¢ன் படைப்புக்களையும் மாறி மாறி விமர்சனம் செய்வதையும் வைத்துக் கொண்டே சில சிற்றிதழ்களை வருடக்கணக்கில் நகா;திச் செல்லக் கூடிய நிலமை வருமளவிற்கு இன்றைய படைப்டபுலகம் (அனேகமாக ஆண்களை கொண்டிருப்பவைதான்.) காணப்படுகிறது.

ஆபூர்வமாக ஆண்களுக்கு நிகரான (தங்களை அத்துறைகளில் நிபுணர்களாக கருதும் அளவில் உள்ளவர்களுக்கு) எழுத்துக்களோடு வெளிவரும்போது சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்திரி கவிதைகளுக்கு வரும் |பெண் மொழி| தொடர்பான எதிர்ப்புக்கள் போல் எதையாவது எழுதிக்கிழித்து விவாதித்து குப்பையாக்கி தங்களுக்கு (குழுக்கொள்கை வாதங்களுக்கு) புறம்பானதாக ஆக்கி ஒதுக்கிவிடும் மனோபாவம்தான் படைப்புலகில் இன்னும் நிலைபெற்றுள்ளது.


தமிழ்நாட்டை பொறுத்தவரை புனிதமானதாகருதப்படும்; இறைபாடல்களில் கூட (சித்தா; பாடல்களில்) இல்லாத பதப்பிரயோகங்களா? முகம் சுளிக்கும் பெண் உறுப்புக் குறியீடுகள் எத்தனை ? எத்தனை ? இவற்றை எல்லாம் இந்தியா டுடேயில் எழுதியவர்கள் |பக்திப்பெருக்கோடு| நோக்கினார்களா? அப்படி நோக்கியதனால் தானோ யோனி, முலைகள், போன்ற பதங்ளை ஆபாசமாக விரசமாக ஆண் கவிஞர்களுக்கும் ( மூத்த கவிஞர் அப்துல் ரஹ்மானுக்கு கூட) அருவருப்பாக சமூகச் சீரழிவாக தோன்றியிக்கிறது.?

எனவே பெண்களுக்கெதிரான வன்முறைக் கலாசாரத்தை சமூகத்தில் ஒரு சாரார் ஏதோ சொல்லி நியாயப்படுத்தவது போல் பெண்களின் எழுத்து மொழிக்கெதிரான வன்முறைகள் தலை தூக்கி உள்ளதையே தான்யா போன்றோ¡¢ன் இத்தகைய விமர்சனங்கள் வெளிக்காட்டுகின்றன.

எனவே |பனுவலை| பொறுத்தவரை பெண்களின்; படைப்புக்கள் தொடர்பான விமர்சனத்தையோ அறிமுகத்தையோ தருவது மிகச் சொற்பமாக உள்ள நிலையில் தான்யா போன்றோரது தொடர்பற்ற விதத்தில் அமைந்துள்ள நோக்குகள் குறிப்புக்கள் ஆரோக்கியமானவை அல்ல என்பதோ¡டு |பனுவல்| இன்னும் அதிகமான யதார்த்த நிலை இலக்கிய நிகழ்வுகளையும் அதிலும் குறிப்பாக பெண்கள் படைப்புக்கள் தொடர்பான ஆக்கங்களை பக்கச்சார்பற்று அதிகா¢க்க வேண்டும் என்பதையும்இப்படியான விமர்சகர்களுக்கு வேண்டுகோளாக முன் வைக்கின்றேன்.

http://www.geotamil.com/pathivukal/uruthiraontanja_august2004.html

'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நு¡லை முன் வைத்து...


தான்யா


இன்று பெண்மொழி, பெண்களின் எழுத்து என்பன பரவலாகப் பேசப்படுகிறது. அவை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் பரவலாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' என்ற நு¡ல் வெளிவந்திருக்கிறது. சல்மாவின் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' மாலதி மைத்¡¢யின் 'சங்கராபரணி' மற்றும் குட்டிரேவதியின் 'முலைகள்' தொகுப்பைத் தொடர்ந்து பெண்களின் வெளிப்படையான எழுத்துத் தொடர்பாய் சர்ச்சைகள் வெகுசன ஊடகங்களிலும் சிற்றிதழ்களிலும் இடம்பெற்று வருகிறது. அடக்குமுறை சார்ந்த வாழ்வின் வலியைச் சொல்லும் சல்மாவின் 'ஒப்பந்தம்' என்ற கவிதையில் கூட

'எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி'

என்ற இறுதி வரிகளையே பத்திரிகைகளில் எடுத்துப் போட்டிருந்தார்கள். அதனு¡டாக சர்ச்சையில் குளிர்காயும் ஒரு வியாபாரத் தன்மைதான் தென்படுகிறது. 'காமத்துப்பால் கவிதைகள்' என்ற தலைப்பில் இந்தியா ருடே எடுத்துப் போட்டிருக்கிறது. இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறையுடன் ஊடகங்கள் செயற்ப்பட்டு வருகின்றன. 'முலைகள்' போன்ற பெண்களின் தொகுப்புக்களுக்கான விமர்சனங்களைப் பார்க்கையில், முலைகள் யோனி போன்றவைகள் ஆண்களுக்குச் சொந்தமானது போலவும் அவர்கள்தான் அதைப்பற்றி எழுத முடியும் என்பது போலவும் இருக்கிறது. சமகால சூழல் இப்படியிருக்க, ஈழத்தில், தொண்ணு¡றுகளிலேயே வெளிப்படைத் தன்மை கொண்ட கவிதைகளை மைதிலி எழுதியுள்ளார்.

'எல்லாம் முடிந்து
அமைதியாய் து¡ங்குகிறான் அருகே
என் இத்தனை நாளைய
காதலும் கனிவும்
இதந்தரு மென்னுணர்வுகளும்
பொங்கியெழுந்த குறியின்முன்
ஒழுகிக் கிடக்கிறது
கட்டிலின் கீழே'
(பொருள், பக்-42)

'இப்போது எஞ்சியிருப்பது
களைப்படைந்த முகம்
குறிதேடியலையும் கண்களால்
சலிப்படைந்துபோன
சிறுமென் இதயம்
யோனி முலைகளற்ற பெண்ணை
யாரும் காதல் கொள்வாரா?'
(தினந்தோறும், பக-65)

'கோபம்
உன் குறியைச்
சூம்பவைத்து விடுகிறது'
(பின்னரும், பக்-62)

போன்ற கவிதை வா¢களை எந்த வலிந்தெழுதும் தொனியுமற்று 1989-91களில் எழுதியுள்ளார். மைதிலியின், 2001, 2002, 2003 இல் எழுதிய இறுதி மூன்று கவிதைகள் மட்டுமே புலம்பெயர்வுக்குப் பின் எழுதப்பட்டுள்ளது. மற்றைய முப்பத்தி எட்டுக் கவிதைகளும் ஈழத்தில் எழுதப்பட்டு, பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியுள்ளது. மைதிலி, மைதிலி அருளையாவாகவும் கொற்றவை என்ற புனைபெயரிலும், கவிதைகள் எழுதியவர். விடுதலைப் போராட்டம், பெண்விடுதலை போன்றவை நேரடியாக விவாதிக்கப்பட்ட சூழலில் இருந்து வந்தவர். ரஸ்ய எழுத்துக்களில் கொண்ட ஈடுபாடும் பரவலான வாசிப்புமே இவரது படைப்பாளுமையை வளர்த்திருக்கிறது. நல்ல வாசிப்பும் தேடலும் இவரது கவிதைகளை நேர்த்தியாகவும் இறுக்கமாகவும் கட்டி இருக்கிறது. ரஸ்ய இலக்கியங்களில் குறிப்பாக அனா அகமத்தோவாவின் தாக்கம் இவரது கவிதைகளில் தெரிகிறது.

'அது உண்மைதான
எனக்குத்தெரியும
உறவுகள் சாசுவதமானவையல்ல'
என்ற மைதிலியின் வரிகளும்

'அது உண்மையல்ல,
உனக்கு இணை யாருமில்லை'
என்ற அகமத்தோவாவின் வரியும் ஒத்திருக்கின்றன.

1988 இல் திசையில் எழுதிய கவிதைகளில் உள்ள மொழி ஆளுமையும், கவித்துவமும் 2003 இல் எழுதிய கவிதைகளிலும் இருக்கிறது. பல பெண் கவிஞர்கள் எழுதாது போய் விட்ட சூழலில் இவர் தொடர்ந்தும் அதே ஆளுமையோடு இயங்குகிறார்.

உரிய காலத்தில் பதிப்பிக்காமல் போனதால் இத் தொகுப்பிற்கு உ¡¢ய கவனம் பெறாமற் போக வாய்ப்புள்ளது. தமிழக பெண் கவிஞர்கள் இன்று எதிர்கொள்ளும் எந்தக் குற்றச்சாட்டுமின்றி தனது கோபம், வருத்தம், தனிமை, போன்ற உணர்வுகளுக்குரிய இயல்புடன் காமத்தையும் எழுதியுள்ளார். இன்று சல்மா, மாலதி மைத்¡¢ போன்றோரின் படைப்புக்களே பேசப்படுகிறது. மைதிலியின் தொகுப்பின் தாமதமான வருகையால் இவர்களுக்கு பின்னாலேயே மைதிலி பார்க்கப் படுவார். எனினும் மைதிலி, ஆழியாள், கர்சியா போன்றோர்க்கென ஒரு தனிப்பாணி இருக்கிறது அது எந்த இந்தியக் கவிஞர்களின் பாணியையும் கொண்டிருப்பதில்லை.

நீண்ட ஆண்டுகளின் பின் மிகுந்த கவனக்குறைவுடன் இப் புத்தகம் வந்திருக்கிறது. எழுதிய உடனே எந்தத் திருத்தமுமின்றி பத்திரிகையில் பிரசுரிக்க அநுப்பும் படைப்பாளிகளுள் மைதிலியின் 1988 முதல் 2004 வரையிலான கால இடைவெளி மிக நீண்ட காலம். இதுவே இவரது படைப்பின் பலமும் பலவீனமும் ஆகும். காலச்சுவடு அட்டை மற்றும் அச்சுக் கோர்ப்பில் பாரிய கவனம் இன்றி வெளியிட்டுள்ளது. இது தாமதமாக வெளிவரும் ஒரு படைப்பாளியின் தொகுப்புக்கு கொடுக்க வேண்டிய கவனத்தை குறைத்து, அளவுக்கதிகமான மந்தமான உணர்வை உண்டு பண்ணுகிறது.

மைதிலியின் தலைப்புக்கள் கவிதைகளுக்கு பொருத்தமில்லாது இருக்கிறது. குறிப்பாக 'பொருள்' என்று ஒரு கவிதைக்கு தலைப்பிட்டுள்ளார், தலைப்புக்கும் கவிதைக்குமான தொடர்பு இருப்பதாய் தெரியவில்லை. தலைப்புகள் கட்டாயம் போட வேண்டும் என்பதற்காக போடப் பட்டிருக்கிறது. பெண்களின் தொகுப்புக்கான அட்டைப் படத்தைப் பொறுத்தளவில், அதிக கவனமின்றி பெண்குறி மற்றும் மார்பகங்களை அட்டையில் போட்டுவிடுவதோடு, பதிப்பகத்தா¡¢ன் வேலை முடிந்துவிடுகிறது. 1984 ம் ஆண்டு எம்.ஏ.நுகமான், அ. யேசுராசா ஆகியோரால் தொகுக்கப்பட்ட 'பதினொரு ஈழத்துக்கவிஞர்கள்' என்ற கவிதைத் தொகுப்பில் எல்லோரும் ஆண்களே. பல பெண் படைப்பாளிகளின் வருகையால், இனி வரும் தொகுப்புக்களில் பெண் கவிஞர்களின் படைப்பின்றி ஒரு தொகுப்பு வெளிவரும் என்று தோன்றவில்லை.

பெண்களின் படைப்புக்களும்!
அது சார்ந்த விமர்சனங்களும்!

காலச்சுவடில் பிரம்மராஜன் குட்டிரேவதியின் 'முலைகள்' தொகுப்புக்கான மதிப்புரையில் (காலச்சுவடு யூலை-கஸ்ட் 2003) எப்படி கவிதை எழுத வேண்டும் என்பது முதல் முலைகள் வெறும் மாறுபட்ட வியர்வைச் சுரப்பி தான் என்றும் அதற்கேன் முக்கியம் என்ற ரீதியில் எழுதியுள்ளார். அவரும் வெகுசன ஊடகங்களும் வெவ்வேறு வகையில் குட்டி ரேவதி அப்படியரு தலைப்பை தனது தொகுப்புக்கு இட்டதை கேள்விக்குட்படுத்தியிருந்தனர். இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமலே ழியாள், ரேவதி, சங்கரி போன்றவர்கள் பாலியல் உறவுசார் கவிதைகளை எழுதியுள்ளார்கள். அவை உரிய கவனத்தை இந்தியாவிலோ வெளிநாடுகளிலோ பெறவில்லை. கவனிப்புக்காக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை.

இன்று எல்லா எழுத்தாளர்களும் விரும்பியபடி மற்ற படைப்பாளிகளை பட்டியலிடுகிறார்கள். தெரிந்த சில பெயர்களை பட்டியலிட வேண்டும் என்பதற்காகவே பட்டியலிடகிறார்கள். பட்டியலிடும் போது, குறைந்தபட்சம் 'இது என் வாசிப்புக்கு உட்பட்டது' என்பதை தெளிவுபடுத்துவதில்லை. அப்படியரு அபத்தமான பட்டியலிடலை, தமிழக விமர்சகர், கவிஞர் ராஜமார்த்தாண்டன் (காலச்சுவடு பெண்கள் சிறப்பிதழ்) ஈழத்தின் முக்கிய பெண் கவிஞர்கள் என ஊர்வசி, சங்கரி, ஒளவை போன்றோரைச் சொல்வது¡டாகக் செய்துள்ளார். மொழியாழுமை ஈழத்துப் பெண்கவிஞர்களை விடவும் தமிழக பெண்களுக்கு கை கூடி உள்ளதாக எழுதியுள்ளார். உரிய தேடல் இன்றி இப்படி மேலோட்டமான விமர்சனத்தை(?) வாசிப்பது¤டாக ஈழத்துப் படைப்பாளிகள் மற்றும் படைப்புகள் குறித்ததான எவ்வித பு¡¢தலை தமிழக வாசகர்களால் பெற முடியும்.

'பறத்தல் அதன் சுதந்திரம்' என்ற (இந்தியா, ஈழம்,மற்றும் புலம்பெயர்) பெண்களின் தொகுப்பில் சிவரமணியின் கவிதையை சன்மார்க்காவின் பெயரில் போட்டுள்ளார்கள். சித்ரலேகா மொளனகுரு ஒவ்வொருமுறையும் சிவரமணியின் கவிதையை, 'கண்டெடுத்தேன்' என அடிக்குறிப்பிட்டு தன் 'பெண்' சஞ்சிகையில் பிரசுரிப்பது போல் இந்த அயாக்கிரதையும் அவர்களது இலங்கை பெண் கவிஞைகளைப் பற்றிய "க்கறையின்மையையே காட்டுகிறது. இது பற்றி ஆழியாள் (காலச்சுவடு பெண்கள் சிறப்பிதழ் மே-யூன் 2003) விமர்சித்தபோது அதற்கு பதில் தந்த மாலதி மைத்ரி - க்ருசாங்கினி கிய தொகுப்பாசி¡¢யர்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட புத்தகத்தில் (சொல்லாத சேதிகள்-சிலிக்குயில் வெளியீடு, 1987, இரண்டாம் பதிப்பு) சன்மார்க்காவின் பெயரிலேயே 'வையகத்தை வெற்றிகொள்ள' என்ற கவிதை இருப்பதாகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக அப்படித்தான் இருக்கிறது, இந்த ஆள் மாறாட்டம் குறிந்து பதினைந்து ஆண்டுகளாக ஏன் யாருமே பேசவில்லை என்றும் கேட்டிருந்தார்கள். இவை தொகுப்பாசிரியர்களின் பொறுப்பீனத்தையே காட்டுகிறது. ஒரு படைப்பை தங்கள் தொகுப்புக்காக எடுக்கும்போது ஆராய்வது தொகுப்பாசிரியரின் கடமை அதை விடுத்து வந்தவற்றை அப்படியே பிரசுரிப்பது மீள்பிரசுரமே ஒழிய அது தொகுப்பாசிரியர்களின் வேலையில்லை. இவர்கள் இலகுவில் கிடைக்கக் கூடிய தாமரைச்செல்வி பதிப்பகத்தால் வந்த செல்வி சிவரமணி கவிதைகள் என்கிற தொகுப்பில் இருந்து இந்தக் கவிதைகளை எடுத்திருக்கலாம். அதைவிடுத்து 15 வருடங்களிற்கு பின்னோக்கிச் சென்று, எடுத்திருக்க வேண்டியதில்லை. மாலதி மைத்ரி போன்ற படைப்பாளிகளே இப்படி பொறுப்பில்லாது பதிலளிக்கையில் இனி வருபவர்கள் எப்படி எல்லாம் அசட்டையாக இருக்கப் போகிறார்களோ தெரியாது. இது சன்மார்க்காவின் கவிதையா அல்லது சிவரமணியின் கவிதையா என்பது சித்ரலேகா மெளனகுரு, சன்மார்க்கா போன்றவர்களாலேயே தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

பல ஆண் எழுத்தாளர்களுக்கு பெண்களின் எழுத்துக்களை வாசிப்பது விடுப்புப் பார்க்கும் தன்மையாகவே இருக்கிறது. என்ன எழுதியிருக்கிறார்கள், யாரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள், கணவனோடு இருக்கிறார்களா, ஏதாவது பிரச்சனையா, துணை தேடுகிறார்களா? தனித்திருக்கிறார்களா? திருப்தியில்லாமலிக்கிறார்களா? இது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடித்தான் வாசிக்கிறார்கள், இது படைப்பைவிட அப் படைப்பாளியின் அந்தரங்கத்தை பார்க்க நினைக்கும் அல்ப்பத்தனமான பண்பையே காட்டுகிறது.

அவலட்சணமான
அந்த அறிவுஜீவிப் பெண்ணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை

(மகுடேஸ்வரன, யாரோ ஒருத்தியின் நடனம்)

ஒரு ஆண் கவிஞா¢ன் தொகுப்பில், இப்படி ஒரு கவிதை வெளிவந்திருந்தது. இப்படியான வன்முறையான வக்கிரமான ஆணாதிக்க சிந்தனையுள்ள இந்தக் கவிதைகளை எதிர்க்காத இந்தப் படைப்பாளிகள், பெண்கள் தங்கள் உறுப்புக்களைப் பற்றி தாங்களே எழுதும் போது வந்து விடுகிறார்கள். பிரம்மராஜன் அவர்கள் காலச்சுவடு இதழில் எப்படி கவிதை எழுத வேண்டும் என்று குட்டி ரேவதிக்கு பாடம் எடுக்கிறார், இன்னும் கொஞ்சம் மேலே போய் மார்பகங்கள் வெறும் வேர்வைச் சுரப்பிதான் என்று ஒரு உயிரியல் பாடத்தையே தனது மதிப்புரையில் நிகழ்த்துகிறார். இவைகள் பாரபட்சமான தன்மையே காட்டுகிறது. இந்தமாதிரியான விமர்சனங்களை விடுத்து நல்ல ஆரோக்கியமான விமர்சனங்கள் தமிழ் சூழலில் வரவேண்டும். நண்பர்கள் ¦திந்தவர்கள் என்று விமர்சனங்கள் வரையறைகளுக்குள் கட்டுப்பட வேண்டியதில்லை.


http://www.geotamil.com/pathivukal/tanyaonmythili_june2004.html