6/24/2005

Image hosted by Photobucket.com
தொலைவில் கேட்கும் உன் குரலை
என் வீட்டுச் சாளரங்கள்
தடுக்கின்றன

கால்களை அகட்டி வைக்க இயலாத
வெள்ளைப் புதர்களுக்குள்
பாதங்கள் தாழ
இனங்காணத் தெரியாத
சில குரல்களுடன் தொடர்கின்றேன்

மேகங்களுக்குள் ஒளிந்து கொண்டு
ஏதோ ஒன்று அச்சமூட்டுகிறது
தனிமை நீண்டு
விரக்தியில் என் அகங்காரம்
அழுகையாய் வெடித்து
கேவலாய் அவ் ஒலி
காற்றில் கலக்கும்

அப்பொழுது
ஆழ்ந்த நேசத்தில் உருகும்
இடைவிடாத உனது தவிப்பை
என்னை அடைய விடாமல்
இச்சாளரங்கள்
தடுக்கின்றன.
~

(2000)
காலம், இதழ் 24, யூன் 2005

Comments on ""

 

Blogger டிசே தமிழன் said ... (12:59 AM) : 

தான்யா, கவிதை பிடித்திருந்தது. ஓவியமும் கவிதையின் பாடுபொருளுக்கேற்ற பொருத்தமான தெரிவு.

 

Blogger PositiveRAMA said ... (1:00 AM) : 

(இ)தான்யா கவிதைங்கிறது

 

Blogger -/பெயரிலி. said ... (1:04 AM) : 

அருமையான படம்

 

Blogger ஈழநாதன்(Eelanathan) said ... (1:32 AM) : 

கவிதையெழுதுறவர் நல்ல கவிதையாம் படம் காட்டுறவர் நல்ல படமாம்.எனக்கு இரண்டுமே நன்றாய்த் தான் இருக்கிறது

 

Blogger Balaji-Paari said ... (10:14 AM) : 

நல்ல கவிதை மற்றும் படம்.

 

Blogger தான்யா said ... (10:39 AM) : 

நன்றி டீஜே PositiveRAMA பெயரிலி ஈழநாதன் பாலாஜி பாரி.

PositiveRAMA இ.தான்யா என எழுதியிருக்கிறீர்கள் உண்மையில நான் இ.தான்யா இல்லை கொஞ்சம் குழப்பமாப் போச்ச :-).

ஈழநாதன்
பெயரிலி படத்தைக் கண்டாலே குதிக்கிறார் மகன் இப்ப படத்துக்கு போஸ் கொடுக்கிறார் இல்லப் போல.

பாலாஜி கவிதை மட்டுமே என்னுடையது, படம் போட்டது நான் இல்லை.

 

Blogger Shakthi said ... (11:46 AM) : 

நல்ல கவிதை தான்யா.

 

Blogger கிஸோக்கண்ணன் said ... (12:01 PM) : 

கவிதையின் தலைப்பு என்ன தான்யா?

 

Blogger டிசே தமிழன் said ... (12:15 PM) : 

கிஸோ,நான் வடிவான ரோஜாவைப் போட்டால், ரோஜாவை இரசிக்காமல் தலைப்பு வடிவாயிருக்கிறது என்கின்றீர். இப்ப தான்யா கவிதை எழுதினால் கவிதையைப் பார்க்காமல் அதன் தலையங்கம் என்ன்வென்று தேடுகின்றீர். இது போதாதென்று இரண்டுவரிகளில் பெரிய தத்துவங்கள் மாதிரி பதிவுகளும் எழுதுகின்றீர். ராசா நீர் போற போகைப் பார்த்தால் சரியில்லை மாதிரிக்கிடக்கிறது. முத்லில் போற திசையை மாற்றும் அல்லது 'நண்பர்களை' மாற்றும் :-).

 

Blogger தான்யா said ... (4:04 PM) : 

நன்றி சக்தி
கிஸோக்கண்ணன் இந்தக் கவிதைக்கு தலைப்பு இல்லை, பெரும்பாலும் நான் கவிதைகளுக்கு தலைப்புப் போடுவதில்லை.

டீஜே தலைப்பு மட்டும் தான் உங்கட மற்றம் படி ஜய்யரோட பூவைக் களவெடுத்துக் கொண்டு வந்த கதை
கிஸோக்கண்ணனுக்கு தெரிந்திருக்காதா?

 

Blogger கிஸோக்கண்ணன் said ... (2:25 PM) : 

அடப்பாவி, ஐயரம்மாவுக்கு ஐயர் இனி என்ன சொல்லிச் சமாளிப்பார்?

 

Blogger டிசே தமிழன் said ... (3:49 PM) : 

தான்யா, கிஸோ!
பத்மநாப ஜயர்தான் என்ரை நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு யாருக்காவது ரோஜாவைக் கொடும் என்று எனக்குத் தந்தவர். ஆனால் நான் கிளிக்குக் கொடுக்கமுன்னர் பச்சைக்கிளிதான் பறந்து போயிட்டுது :-(.

 

post a comment