5/10/2005

'பிள்ளை கெடுத்தாள் விளை'


'பிள்ளை கெடுத்தாள் விளை'கதைக்கு பதிவுகள் இணையத்தளத்தில் ரவிக்குமார் எழுதிய எதிர்வினை மிகவும் சிந்திக்க வைத்தது. எப்படி இவர்களையெல்லாம் காலச்சுவடு கையாளுகிறது என்கிற அடிப்படையில். இது தலித்துக்கு எதிரான கதையா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்க இதற்கு பதில் சொல்ல வேண்டிய சு.ரா மொளனமாக இருக்க ரவிக்குமார் ஏன் பதில் சொல்லுகிறார். ரவிக்குமார் ஒரு தலித் சிந்தனாவாதி என்று அறியப்பட்டவர் அவர் மூலமாக நான் எழுதியது தலித்துக்கு எதிரானது அல்ல என்று சொல்லுவதன் ஊடாக தலித் எழுத்தாளர்களை மொளனமாக்குகிறார்கள். இந்த இடத்தில் ரவிக்குமார் தன்னுடைய கருத்தை மட்டும் சொல்லி விட்டுப் போயிருக்கலாம் மெனக்கெட்டு ‘பிள்ளை கொடுத்தாள் விளை’ சிறந்த கதை எனறு சொல்லி தலித் எழுத்தாளர்கள் இதற்கெதிராக செயற்பட்டால் அவர்களுக்கு இலக்கியத்தை புரிந்து கொள்ளும் அறிவுகிடையாது என்று கருத்துக்கள் வலுப்படும் என்று அச்சுறுத்துகிறார். இவற்றையெல்லாம் வாசிக்கும் போது ரவிக்குமாருக்கு என்று சுயமான கருத்தில்லையா சு.ராவின் சாதாரண கதையைக் கூட சமீபத்தில் வந்த மிக முக்கியமான கதையாய் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது அவருக்கு என்று தோன்றியது. ஆதவன் தீட்சண்யா அதை தலித்துகளுக்கு எதிரான கதையாய் பார்த்தால் அதை மறுத்துச் சொல்ல வேண்டியவர் சுராவே தவிர ரவிக்குமார் இல்லை. அப்ப இவர்களுடைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை உங்கட ஆக்களிட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள் என்று சுரா ரவிக்குமாரிடம் விட்டுவிடடாரா?